கோவையில் டேட்டிங் கஃபே... அதிர்ச்சியடைந்த போலீஸ்...!

published 1 year ago

கோவையில் டேட்டிங் கஃபே... அதிர்ச்சியடைந்த போலீஸ்...!

கோவை: கோவையில் “டேட்டிங் கஃபே” திறக்கப்படுவதாக போடப்பட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். 

கோவை சரவணம்பட்டி பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு ''டேட்டிங் கஃபே'' என்ற கடை திறக்கப்படுவதாக இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் தகவல் பரவியது. இதனை முன்கூட்டியே கண்டறிய கோவை மாநகர காவல் துறை ''சோசியல் மீடியா மானிடரிங் விங்'' பிரிவினர் இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த கடையில் விசாரணை மேற்கொண்ட போது, அது சாதாரண கஃபே என்றும், அங்கு டேட்டிங் நிகழ்ச்சிகள் நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்படாது என எழுதி வாங்கிய பின்னர் போலீசார் சென்றனர். 

இது குறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும் போது : கோவையில் தனியார் கஃபே நிறுவனத்தில் இன்ஸ்டன் டேட்டிங் நடப்பதாக இன்ஸ்டா வலைதளத்தில் பரவிய தகவலை, சோசியல் மீடியா மானிடரிங் விங் பிரிவினர் கண்டறிந்து போலீசார் சென்று சோதனை செய்த போது அது சாதாரண கஃபே என்பதும் தெரியவந்தது. 

மேலும் இந்த விளம்பரத்தை பெங்களூரில் இருந்து பெண் ஒருவர் பதிவு செய்ததாகவும், அவர் யார் எதற்காக பதிவு செய்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe