கோவையில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற நுகர்வோர் போட்டிகள்..!

published 1 year ago

கோவையில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற நுகர்வோர் போட்டிகள்..!

கோவை: கோவை என்.ஜி.பி கலை, அறிவியல் கல்லூரி, குடிமக்கள்  நுகர்வோர் சங்கம் மற்றும் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் ஒருங்கினைந்து கல்லூரிகளுக்கிடையேயான நுகர்வோர் வழக்கு ஆய்வு  (Consumer case  analysis ) போட்டியை நடத்தின.

உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்கள் நல புலன் மேன்மையாளர் வெங்கடேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார். இதில் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்பத்தூர் நிறுவனர் ஜெயராமன், எம். எம். ராஜேந்திரன் மற்றும் சுப்ரமணியன் மற்றும் கோவை சட்டக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கோதன காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்ளாக பங்கேற்றனர்.

இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் வாயிலாக  மாணவர்களிடையே நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய விழிப்பணர்வு ஏற்படுத்தபட்டது. பேராசிரியர்கள் ரேணுகாதேவி மற்றும் நித்யா ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe