இந்தியாவில் முதன் முறையாக கோவையில் 'மெட் மால்' துவக்கம்

published 1 year ago

இந்தியாவில் முதன் முறையாக கோவையில் 'மெட் மால்' துவக்கம்

கோவை: 
கோவையில் மருத்துவ உபகரணங்களுக்காக பிரத்யேகமாக இந்தியாவின் முதல் மால்  தொடங்கப்பட்டுள்ளது. 
மெட் மால்  முயற்சியின் முக்கிய நோக்கம், குடிமக்களுக்கு சிறந்த தரமான சிகிச்சைகளை வழங்குவதற்காக மருத்துவத் துறையை மேம்படுத்துவதாகும். இதற்காக, இந்த மால் பல்வேறு வகையான  சிறப்பு மருத்துவ உபகரணங்களுடன் ஒரே தீர்வாக இருக்கும்.

மருத்துவர்.ஆர்.வி.அசோகன்தேசிய ஐ.எம்.ஏ தலைவர்மருத்துவர் அபுல் ஹசன் மாநிலதலைவர், ஐ.எம்.ஏ டிஎன் எஸ் பி மற்றும் இதர  ஐ.எம்.ஏ உயரதிகாரிகள் மற்றும் மருத்துவர் ஜி.பக்தவத்சலம் தலைவர் கே.ஜி மருத்துவமனை மற்றும் கோவை மூத்த மருத்துவர்கள் முன்னிலையில் மெட் மால்-ஐ  திறந்து வைத்தார்.

மெட் மாலில்  தீவிரசிகிச்சை பிரிவு உபகரணங்கள், டயாலிசிஸ்கருவிகள், ஒப்பனை உபகரணங்கள், மருத்துவமனை தள பாடங்கள், வீட்டு பராமரிப்பு பொருட்கள்மற்றும் பலவற்றை மிக தரத்தில் வழங்க உள்ளது. 

உபகரணங்கள் விற்பனை மற்றும் வாடகை நோக்கங்களுக்காக வழங்கப்பட உள்ளது கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் மெட் மால் அமைந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe