இரண்டாம் சபரிமலை- சித்தாப்புதூர் கோயிலில் மகரஜோதி…

published 1 year ago

இரண்டாம் சபரிமலை- சித்தாப்புதூர் கோயிலில் மகரஜோதி…

கோவை: கோவை சித்தாபுதூர் ஐயப்ப கோவில் மகர ஜோதி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் நேற்று மாலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. ஐயப்பனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட பின்னர் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.

இதனையொட்டி அனைத்து ஐயப்ப கோவில்களிலும் ஜோதி தரிசன நிகழ்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்ப கோவிலிலும் ஜோதி தரசன நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் பெற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe