தங்கம் அதிரடி விலை குறைவு..!

published 1 year ago

தங்கம் அதிரடி விலை குறைவு..!

கோவை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.160 குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தியில் காணலாம்.  

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. குறிப்பாக இந்த நாட்களில் தங்கம் விலை குறைந்ததை விட, அதிகரித்ததே அதிகமாக காணப்பட்டது.

உதாரணமாக கடந்த 10ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.80, 11ம் தேதி ரூ.40 குறைந்தது. 100 ரூபாய் விலை அதிகரித்து, அதில் பகுதி அளவுக்கே விலை குறைவு ஏற்பட்டது. இது தங்கம் பயனாளர்களை சோகத்தில் ஆழ்த்தி வந்தது.

இதனிடையே கடந்த 13ம் தேதி அதிரடியாக பவுனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று ரூ.160 குறைந்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.160 விலை குறைந்து ஒரு கிராம் ரூ. 5,850க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.46,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.128 விலை குறைந்து ஒரு கிராம் ரூ.4,792 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,336ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe