உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பிரத்யேக புகைப்படங்கள்..

published 1 year ago

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு.. பிரத்யேக புகைப்படங்கள்..

மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று பாலமேடு உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெற்றன.

இதனிடையே உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ய்ன்று தொடங்கியது. அமைச்சர் உதயநிதி இந்த போட்டியை கொடிசயசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 1500 காளைகளும், 700 வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் துடிப்புடன் திமிலை பிடித்து அடக்கி வெற்றி பெறுகின்றனர்.

போட்டியில் காளையை அடக்குபவர்களுக்கு அண்டா, கட்டில் மெத்தை, டிவி, பீரோ, ஃபேன், சைக்கிள், பைக், கார், தங்கம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே சிறாவயலில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட மாடு முட்டி வலையபட்டி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe