முருகனுக்கு உகந்த தைப்பூசம் - நிலாவுக்கு சோறு படைத்து கும்மி பாடிய பெண்கள்- வீடியோ காட்சிகள்...

published 1 year ago

முருகனுக்கு உகந்த  தைப்பூசம் - நிலாவுக்கு சோறு படைத்து கும்மி பாடிய பெண்கள்- வீடியோ காட்சிகள்...

கோவை: முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசம் வருவதையொட்டி கோவையில் பெண்கள் ஒன்றிணைந்து நிலாவுக்கு சோறு படைத்து கும்மியடித்து மகிழ்ந்தனர்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கிராமப்புற பகுதியில் தேர் திருவிழா தொடங்கியதும் நிலாவை குழந்தையாக எண்ணி சோறு ஊட்டும் நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம்.அந்த வகையில் கோவை மணியக்காரன் பாளையம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து  ஊரின் நடுவே உள்ள மைதானத்தில் கோலமிட்டு, கோலத்தின் நடுவே சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து அவரவர் வீடுகளிலிருந்து பழம் மற்றும் சர்க்கரை கொண்டு வந்து நிலாவுக்கு சோறு படைத்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி சிறுவர்,சிறுமியர் பெண்கள் கும்மியடித்து நிலா சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர். தேரோட்டம் முடியும் வரை தினசரி இரவு கலவை சாதம் நிலாவிற்கு படைத்து கும்மியடித்து பாட்டுப்பாடி அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு மகிழ்வது குறிப்பிடத்தக்கது.

வீடியோ காட்சியை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/LNO8ph4dKfM?si=ATzs0PmlSYveFrnn

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe