கோவையில் நிர்வாணமாக ஓடிய பெண்ணால் பரபரப்பு…

published 1 year ago

கோவையில் நிர்வாணமாக ஓடிய பெண்ணால் பரபரப்பு…

கோவை: கோவையில் உடைகளை களைந்து ரோட்டில் ஓடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை சேர்ந்தவர், 48 வயது பெண். இவர் சம்பவத்தன்று இரவு ரத்தினபுரி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென அவர் தனது உடைகளை களைந்து ரோட்டில் ஓடினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

ஆனால் அந்த பெண் அவர்களை தள்ளி விட்டு அவர்களிடம் சிக்காமல் தொடர்ந்து ஓடி கொண்டு இருந்தார். இதுகுறித்து பொதுமக்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண் போலீசார் உதவியுடன், அந்த பெண்ணை மடக்கி படித்தனர். பின் அருகில் இருந்தவர்களிடம் உடைகளை வாங்கி அணிவித்தனர். போலீசார் அவரிடம் விசாரித்த, போது தான் ஆன்மீகவாதி என்றும், தனது உள்மனதில் ஆன்மீக உத்தரவு வந்தது என்றும், அதில் உடைகளை களைந்து பரவசம் அடைய கூறியதாக தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று அவரது குடும்பத்தினரை வரவழைத்தனர். அவர்கள் தங்கள் அந்த பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லை என்றுள்ளனர். அதன் பின் போலீசார் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ரத்தினபுரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe