ராமரின் பிரசாதங்களை கொண்டு ராமர் ஓவியம்- அசத்திய கோவை கலைஞர்...

published 1 year ago

ராமரின் பிரசாதங்களை கொண்டு ராமர் ஓவியம்- அசத்திய கோவை கலைஞர்...

கோவை: ராமரின் பிரசாதங்களை கொண்டு ராமரின் உருவத்தை கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் வரைந்து அசத்தி உள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறை மற்றும் விளையாட்டு துறை பிரபலங்கள் உட்பட சன்யாசிகள், யோகிகள், தவசிகள், குருமார்கள் என பலர் பங்கேற்கின்றனர். மேலும் அங்கு பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே சில பிரபலங்களும் பக்தர்களும் ராமரின் அவர்களின் கலை படைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் ராமருக்கு பிரசாதங்களாக படைக்கும் இனிப்புகளான பூந்தி, கேசரி, அவல், எல் உருண்டை ஆகியவற்றை கொண்டு ராமரின் உருவத்தை வரைந்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பாளர் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமருக்கு படைக்கும் இனிப்பு வகைகளான பூந்தி, கேசரி, அவல், எல் உருண்டை ஆகியவற்றில் வண்ண கலவைகளை சேர்த்து ராமரின் உருவத்தை வரைந்துள்ளார்.

இதனை செய்து முடிக்க ஒரு நாள் ஆனதாக கூறும் அவர் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்த ஓவியத்தை வரைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe