நீரில் மிதக்கும் காந்தி மற்றும் பாரதியார் உருவ ஓவியம்- கோவை கலைஞர் அசத்தல்...

published 1 year ago

நீரில் மிதக்கும் காந்தி மற்றும் பாரதியார் உருவ ஓவியம்- கோவை கலைஞர் அசத்தல்...

கோவை: குடியரசு தினத்தையொட்டி நீரில் மிதக்கும் காந்தி மற்றும் பாரதியார் உருவத்தை வரைந்து கோவை கலைஞர் அசத்தி உள்ளார்.

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை நாடு முழுவதும் பிரம்மாண்டமாகவும் கொண்டாடுவதற்கு அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பாளர், நீரில் வண்ண கோலப்பொடி மற்றும் மாவை கொண்டு மிதக்கும் மகாத்மா காந்தி மற்றும் மகாகவி பாரதியாரின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார். வழக்கமாக இந்த பொடிகள் சிறிது நேரத்தில் நீரில் கரைந்துவிடும் என்பதால் அது கரைவதற்குள் இரண்டு ஓவியங்களையும் வரைந்துள்ளதே இதன் சிறப்பம்சமாகும்.

தேசத்தலைவர்களின் ஈர நெஞ்சம் என்றும் நம் இதயத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நீரில் தலைவர்களின் உருவத்தை வரைந்துள்ளதாக UMT ராஜா தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe