படித்தது பிளஸ் 2.. பார்த்தது டாக்டர் வேலை.. கோவையில் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தவர் கைது..!

published 1 year ago

படித்தது பிளஸ் 2.. பார்த்தது டாக்டர் வேலை.. கோவையில் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தவர் கைது..!

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் 12 ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை சிங்காநல்லூர் நீலிகோணம் பாளையம் பகுதியில் ஜோதி கிளினிக் என்ற பெயரில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து 
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் அங்கு சோதனை மேத்கொண்டதில் தேவராஜ் என்பவர் அங்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இணை இயக்குனரின்  ஓட்டுநரை நோயாளி போல் தேவராஜிடம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விட்டு அவரை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர்.
தேவராஜ் அவருக்கு பல்ஸ், டெம்பரேச்சர் போன்றவை  பார்த்து ஊசி போட இருந்த நிலையில் , இணை இயக்குனர்  ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் அவரை தடுத்து பிடித்தனர். பின்னர் அவரது ஆவணங்களை சரி பார்த்த போது ,  அவர்  12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும்
மருந்து கடையில் முதலில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.  அந்த அனுபவத்தை வைத்து  பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்து இருப்பதும் தெரிய வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நீலிகோணம் பாளையம் பகுதியில் கிளினிக் நடத்தி வந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த
கிளினிக்கில் அதிகாரிகள்  ஆய்வு செய்த பொழுது, பயன்படுத்தப்பட்ட மருத்துவ குப்பிகள் மற்றும் மருந்து வகைகளை அதிகாரிகள் கைபற்றினர். இதனையடுத்து  சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டு, போலி மருத்துவர் தேவராஜ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் போலி மருத்துவர் தேவராஜை  கைது செய்த சிங்காநல்லூர்  போலிசார் அவரிடம்   விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போலி மருத்துவர் தேவராஜ் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe