வ.உ.சி மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை- 2,500 போலீசார் பாதுகாப்பு.!

published 1 year ago

வ.உ.சி மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை- 2,500 போலீசார் பாதுகாப்பு.!

கோவை: கோவையில் நாளை நடக்கவுள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை வஉசி மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளார்.

பல்வேறு துறைகளின் சார்பில், சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்க உள்ளார். விமான நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ரயில் நிலையங்களில் பயணிகள் உடைமைகள், பார்சல்கள் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

முக்கிய இடங்களில் குறிப்பாக வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர், மால், மார்க்கெட், வணிக வளாகங்கள், பஸ் ஸ்டாண்ட், மக்கள் கூட்டம் மிகுந்த பொது இடங்கள், கடை வீதிகளில் அசம்பாவிதம் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணி நடத்தி வருகின்றனர். நகர், புறநகரில் சுமார் 2500 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

10க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் செக்போஸ்ட் அமைத்து வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. பதட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நகரில் உள்ள லாட்ஜ், ஓட்டல், மேன்சன் மற்றும் சர்வீஸ் அபார்ட்மென்ட்டுகளில் சோதனை நடத்த, வெளி மாநிலம், வெளிநாட்டை சார்ந்த நபர்கள் தங்கியுள்ள விவரங்களை சேகரிக்க, ஆட்சேபணைக்குரிய நடவடிக்கைகள் உள்ளதா? என கண்டறிய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் 1500 போலீசார், புறநகரில் 1000 போலீசார் கண்காணிப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வ.உ.சி மைதானத்தில் பாதுகாப்புகளை உறுதி செய்யும் வண்ணம் வெடிகுண்டு நிபுணர்கள் நவீன கருவிகளை கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் நிகழ்ச்சிகளை நடப்பதை முன்னிட்டு புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு மைதானம் சமம் செய்யப்பட்டு வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe