கோவை காவல் துறையில் தேர்தல் பிரிவு தொடக்கம்

published 1 year ago

கோவை காவல் துறையில் தேர்தல் பிரிவு தொடக்கம்

கோவை: நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், காவல்துறை சார்பில் தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ள தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கோவை என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. கோவை தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், குலூர், பல்லடம் ஆகிய சட்டசபை தொகுதிகளும், பொள்ளாச்சி தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் கோவை மாநகர காவல்துறை, மாவட்ட காவல்துறை ஆகியவற்றில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

மாநகர காவல்துறையில் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 13 பேர் கொண்ட தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1 இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 எஸ்எஸ்ஐக்கள், 4 ஏட்டு, 2 போலீசார் இடம் பெற்றுள்ளனர். அதேபோல மாவட்ட காவல்துறையில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 8 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகள் விவரம், அதில் கடந்த காலங்களின் பதற்றமான வாக்குச்சாவடிகள் விவரம், எந்தெந்த இடத்தில் அவை உள்ளது. அங்கு எந்த மாதிரியான பாதுகப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட தேர்தல் தொடர்பான விதிமீறல் தொடர்பான வழக்குகள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’. என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe