கோவையில் மூன்று புதிய மேம்பாலங்கள் என்னாச்சு..?

published 1 year ago

கோவையில் மூன்று புதிய மேம்பாலங்கள் என்னாச்சு..?

கோவை: கோவையில் காளப்பட்டி சாலை சந்திப்பு, சிங்காநல்லூர், சாய்பாபாகாலனி என 3 இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது மக்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

கோவையில் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே காளப்பட்டி சாலை சந்திப்பில் இருந்து துடியலூா் சாலை சந்திப்பு வரை 1.40 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.60 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சிங்காநல்லூா் உழவர் சந்தை முதல் ஜெய்சாந்தி தியேட்டர் வரை 2.40 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.140 கோடியே 80 லட்சம் மதிப்பில் மேம்பாலமும், சாய்பாபா காலனி சந்திப்பில் ரூ.50 கோடியே 93 லட்சம் மதிப்பில் 1.14 கிலோ மீட்டா் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் டிசம்பா் மாதம் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பான அறிவிப்புகளோ, கட்டுமான பணிகளோ இன்னும் தொடங்காமல் உள்ளது மக்களை எரிச்சலடையை செய்துள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு பின், தேர்தல் முடியும் வரை ஆளும் கட்சியால் எந்த திட்டத்தையும் அறிவிக்க முடியாது என்ற நிலையில், இந்தாண்டு இப்பணிகள் தொடங்குவது சாத்தியமா? கிடைத்த வாய்ப்பை திமுக., பயன்படுத்திக்கொள்ளுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe