மலைவாழ் மக்களுக்கு நலதிட்ட பொருட்கள் வழங்குவதை ஈஷா தடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு...

published 1 year ago

மலைவாழ் மக்களுக்கு நலதிட்ட பொருட்கள் வழங்குவதை ஈஷா தடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு...

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் NERD தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் பல ஆண்டுகளாக குடியரசு தினம் சுதந்திர தினங்களில் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று கோவை அருகே உள்ள தாணிக்கண்டி மலை கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க செல்லும் பொழுது ஈஷாவை சேர்ந்தவர்கள் தங்களைத் தடுத்து பொருட்களை மலைவாழ் மக்களுக்கு வழங்க விடாமல் செய்ததாகவும், கொடியேற்ற விடாமல் தடுத்ததாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் காமராஜ் கூறுகையில், உரிய அனுமதி பெற்று மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்க சென்ற போதும் ஈஷாவை சேர்ந்த நபர்கள் வழங்கக் கூடாது என தடுத்ததாகவும், மாவட்ட ஆட்சியர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe