களையெடுத்து மண் அணைக்கும் கருவிக்கான காப்புரிமையை பெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்...

published 1 year ago

களையெடுத்து மண் அணைக்கும் கருவிக்கான காப்புரிமையை பெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் குறுகிய வரிசை இடைவெளியில் களையெடுத்து மண் அணைக்கும் கருவியின் கண்டுபிடிப்புக்கான வடிவமைப்பு காப்புரிமையை பெற்றுள்ளது. இந்த காப்புரிமை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் காப்புரிமைகள் வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

குறுகிய வரிசை இடைவெளியில் களையெடுத்தல் மற்றும் மண் அணைக்கும் கருவி என்ஜின், சக்கரம், பவர் டிரான்ஸ்மிஷான், களை எடுக்கும் மற்றும் மண் அணைக்கும் கலப்பை ஆகியவற்றைக் உள்ளடக்கியுள்ளது. களையெடுக்கும் அமைப்பிற்கான சக்தி என்ஜினிலிருந்து தற்போது உள்ள பவர் டிரான்ஸ்மிஷான் அமைப்பு மூலமே கொடுக்கப்படுகிறது. எப்காட்ச் யோக் என்னும் அமைப்பின் மூலம் இது இயக்கப்படுகிறது. தற்போதுள்ள வகை களையெடுக்கும் இயந்திரத்தின் சுழலும் செயலுக்குப் பதிலாக எப்பேடிங் அமைப்பு மூலம் மணி இருக்கம் குறைக்கப்பட்டு களையெடுக்கும் திறன் மேம்படுத்தப்படுகிறது. மண் அணைக்கும் கலப்பையானது எஸ்பேடிங் அமைப்பிற்கு பின்னால் இணைக்கப்பட்டுள்ளது. இது பயிறுடன் மண் அணைக்கும் செயல்பாட்டை செயல்படுத்துகிறது. இது பயிர்களுக்கு சரியான காற்றோட்டத்தை வழங்குவதுடன் பயிர் வேர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. என்ஜின் மூலம் இயக்கப்படும் களையெடுத்து மற்றும் மண் அணைக்க ஏற்ற கருவி என்பது குறுகலான பயிர் வரிசை இடைவெளியில் களைகளை அகற்றுவதற்கான ஒரு தனித்துவமான வடிவமைப்பாகும். கனரக டிராக்டர் அல்லது பவர் டில்லர் இயக்கப்படும் அமைப்பின் இயக்கம் குறைவாக இருக்கும் இடத்தில், குறுகிய பயிர் இடைவெளியில் களையெடுத்து மற்றும் மண் அணைக்கும்
செயல்பாடு திறம்பட செய்யப்படுகிறது.

இந்த கருவியின் வடிவமைப்பு காப்புரிமை பெற்றவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக
துணைவேந்தர் முனைவர் கீதாலெட்சுமி முதுநிலை பட்டபடிப்பு பயிலக முதன்மையர் மற்றும் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர்
ஆகியோர் முன்னிலையில் காப்புரிமைச் சான்றிதழ்களை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe