கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- கோவை நீதிமன்றம் தீர்ப்பு...

published 1 year ago

கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- கோவை நீதிமன்றம் தீர்ப்பு...

கோவை: கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை காட்டூர் ரங்கே கோனார் வீதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் கடந்த 2020ம் ஆண்டு இரவு செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி பால்ராஜ் (42) என்பது தெரியவந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்த செல்வம் பகலில் சீட் கவர் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு, இரவில் மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள பர்னிச்சர் கடையில் காவலாளியாக வேலை செய்து அங்கேயே தூங்குவது வழக்கம்.
 

அதேநேரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பால்ராஜ் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்லாமல் செல்வம் படுத்து உறங்கும் வணிக வளாக பகுதியில் இரவில் தங்கியுள்ளார். அப்போது மதுபோதையில் செல்வம் அடிக்கடி பால்ராஜிடம் பிரச்னை செய்தார். இதனால் செல்வத்தை பால்ராஜ் கொலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காட்டூர் போலீசார் பால்ராஜை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சசிரேகா வழக்கை விசாரித்து பால்ராஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe