நடிகர் விஜய் தொடங்கிய கட்சிக்கு வாழ்த்துக்கள்- கோவையில் அமைச்சர் முத்துச்சாமி தெரிவிப்பு..

published 1 year ago

நடிகர் விஜய் தொடங்கிய கட்சிக்கு வாழ்த்துக்கள்- கோவையில் அமைச்சர் முத்துச்சாமி தெரிவிப்பு..

கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,

6 லட்சம் மதிப்புள்ள விலையில்லா சைக்கிள்கள் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. 
மக்களோடு முதல்வர் திட்டத்தை தொடங்கி மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் நடவடிக்கை எடுத்து மிகச் சிறப்பாக மாவட்ட வாரியாக திட்டம் நடைபெற்று வருகிறது. 
மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படுத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது. இதில் பல லட்சம் மக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. 
601 பேருக்கு மனுக்களுக்கான தீர்வை நாங்கள் இன்று கொடுக்கிறோம். அதில் 11 கோடியே 53 லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் இன்று வழங்க உள்ளோம்.

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வருகிற எட்டாம் தேதி ஈரோட்டில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வில் பங்கு பெறுகிறார். அதே போன்று வருகின்ற 11ஆம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வர உள்ளார். 
கோவையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனை கட்டிடங்கள் மிக விரைவாக திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். 
இலவச மடிக்கணினி குறித்தான பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விஜய் அரசியலுக்கு வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, புதுசா வருபவர்களுக்கு வாழ்த்து சொல்வது தான் மரியாதை நாங்கள் விஜய் தொடங்கிய கட்சிக்கு வாழ்த்துக்கள் சொல்கிறோம். திமுகவை பற்றி மக்களுக்கு தெரியும். திமுக தனித்துவமான கட்சி.நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தொடர்ச்சியாக செய்து வரும் தேர்தலுக்கு என்று தனியாக நாங்கள் வேலை செய்யவில்லை. 
அரசு இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி திமுக தொடர்ச்சியாக மக்களுக்கு பணி செய்து வருகிறது. அந்த வகையில் தான் இப்போதும் பணி செய்து வருகிறோம்.தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு நாங்கள் பணி செய்வதில்லை. மக்களை நோக்கி எப்போதும் பணி செய்வோம்.நாம் தமிழர் கட்சி மீது வெறுப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை செய்தால் அது தவறு. ஆனால் அதைப் பற்றி நாங்கள் இப்போது கருத்து சொல்வது சரியில்லை. 
மதுபானம் விலை உயர்வு குறித்து இப்போது பேசுவது சரியில்லை என்றார்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex Mla, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe