கோவை - சொர்ணூர் மெமு ரயில் மீண்டும் இயக்கம்

published 2 years ago

கோவை - சொர்ணூர் மெமு ரயில் மீண்டும் இயக்கம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/EjTtcBnBSk61kfgvff3n15   

கோவை: கோவையில் இருந்து சொர்ணூர் வரை செல்லும் மெமு ரயில் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜூலை 11ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர கோவையில் இருந்து காலை 11.20 மணிக்கு கிளம்பும் மெமு ரயில் பிற்பகல் 2.30 மணிக்கு சொர்ணூரைச் சென்றடையும். இதேபோல், ஜூலை 11ம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை தவிர) சொர்ணூரில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் மெமு ரயில் மாலை 5.50 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது, போத்தனூர், மதுக்கரை, எட்டிமடை, வாளையார், கஞ்சிக்கோடு, பாலக்காடு, பர்லி, மாங்கரை, லக்கிடி, பலப்புரம், ஒட்டப்பாலம், மன்னனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe