அடுத்த 20 ஆண்டுகளில் இப்படித்தான் இருக்கப்போகிறது நம்ம கோவை: மாஸ்டர் பிளான் தயார்..

published 1 year ago

அடுத்த 20 ஆண்டுகளில் இப்படித்தான் இருக்கப்போகிறது நம்ம கோவை: மாஸ்டர் பிளான் தயார்..

கோவை:வீடுகள் அல்லது குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக சினிமா தியேட்டர்கள் அதிக அளவில் இருக்காது என்பதை கவனித்துள்ளீர்களா? தியேட்டர்கள் இருக்கும் பகுதிகளில் அதிகமாக வணிக கட்டிடங்கள் தான் இருக்கும்.

விவசாய நிலத்திற்கு அருகே மருத்துவமனையோ அல்லது ஷாப்பிங் மாலோ அல்லது தொழிற்சாலையோ கட்டப்படுவது இல்லை என்பதை பார்த்துளீர்களா? அதே சமயம் ஊருக்கு சற்று வெளியில் நிறைய தொழிற்சாலைகள் இருக்கும். இது ஏன் ?

அதற்கு காரணம், ஒரு மாநகரின்/மாவட்டத்தின் நிலங்களை அரசாங்கம் வகை படுத்தி அதை ஒரு மாநகராட்சிக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கோ வழங்கும். அந்தந்த இடங்களில் தான் வணிக நிறுவனங்கள் கட்டப்பட வேண்டும் என்று திட்டம் போட்டு தரப்பட்டிருக்கும். இதை ஒரு மாவட்டத்தின் 'மாஸ்டர் பிளான்' என்று சொல்லலாம்.  

நிகழ்காலத்திலிருந்து அடுத்த 20 ஆண்டுகளில் கோவையில் நடைபெறக்கூடிய மக்கள் தொகை வளர்ச்சி, அதற்கு ஏற்ப கோவை மாவட்டத்தின் நிலப்பரப்பில் அமையக்கூடிய பெரும் நிறுவனங்களுக்கான, தொழில் பூங்கா, தொழிற்சாலைகளுக்கான நிலங்கள், தனியார் வீடுகள், குடியிருப்புகள் கட்டுவதற்கான நிலங்கள், பசுமை மற்றும் விவசாய தேவைக்கான நிலங்கள், வணிக கட்டிட நிலங்கள், மாநகருக்குள் பொது மக்கள் பயன்பாட்டிற்கான அம்சங்கள் இடம்பெற நிலங்கள்  என வகை பிரித்து காட்டக்கூடிய பெரும் வரைபடம் தான் 'மாஸ்டர் பிளான்'.  

ஒருவேளை இன்று  இவ்வாறு ஒரு நோக்கத்திற்காக வகைப்படுத்தப்பட்ட இடங்களில் அதை தவிர வேறு எந்த கட்டிடம் எழவேண்டும் என்றாலும் அதற்கு வெகு நாட்கள் ஆகும். நிறைய அரசு அலுவலகங்களில் கோப்புகளை சமர்ப்பித்து, நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அதற்கு பல நாட்கள் ஆகிவிடும்.

எனவே புதுப்பிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் இருந்தால் வீடு கட்ட நினைப்பவர்கள், வணிக நிறுவனங்கள் கட்ட எண்ணுவோர், தொழிற்சாலைகள் கட்ட எண்ணுவோர் அனைவருக்கும் எளிமையாக இருக்கும்.

கோவை மாவட்டத்தின் மாஸ்டர் பிளான் 1994ல் தான் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்து தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அதன் வரைவு அறிக்கை அரசு ஒப்புதலுக்காக கடந்தாண்டு அக்டோபரில் மாவட்ட நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு இந்தாண்டு ஜனவரி 20ல் அரசு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த வரைவு அறிக்கை மாதிரி விரைவில் பொது பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் இறுதி வரைவு அறிக்கை வெளிவரும். இது புதிதாக வரக்கூடிய நிறுவனங்கள்/தொழிற்சாலைகள் , குடியிருப்புகள், பசுமை பூங்காக்கள் எளிதில் அமைய வசதியாக இருக்கும்.

இதற்கான பிரேத்தியேக இணையத்தளம் உருவாக்கப்பட்டு மக்களிடம் சேர நடவடிக்கை எடுக்கப்படும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe