தமிழகத்திலேயே சுறுசுறுப்பான யானை இது தானாம்!

published 1 year ago

தமிழகத்திலேயே சுறுசுறுப்பான யானை இது தானாம்!

தமிழகத்திலேயே சுறுசுறுப்பான யானை என்ற விருதைப் பெற்றுள்ளது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை.

கும்பகோணத்திற்கு செல்லும் பொதுமக்கள் பலரும் கோயில்களை தரித்துவிட்டு மறக்காமல் செய்யும் விஷயம் ஒன்று உள்ளது. மங்களம் என்ற அந்த யானையை ஒரு முறை பார்த்துவிட்டு வரவேண்டும், அதன் குறும்புத்தனங்களை விடியோவாகவோ, போட்டோவாகவோ எடுத்துவிடவேண்டும் என்பது தான்.

தனது பாகனுடன் சேர்ந்து பல சேட்டைகள் செய்து மக்கள் பலரையும் கவர்ந்து வைத்துள்ளது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம். இந்த யானையை கடந்த 1982ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவர் வழங்கியுள்ளார். தற்போது மங்களத்திற்கு 56 வயது ஆகிறது. 

தினமும் சத்தான உணவுகள், உடற்பயிற்சிகள் என 'ஹெல்த் கான்சியஸ்' உடன் இருக்கும் மங்களம் செய்யும் சேட்டைகள் காண்போரை கவர்ந்திழுக்கும். பாகன் அசோக் தான் மங்களத்திற்கு ஆஸ்தான 'பார்ட்னர்'

குறும்புகள் செய்வது, பாகனுடன் சேர்ந்து விளையாடுவது, செல்போனில் வீடியோ பார்ப்பது என்று அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் மங்களத்தை புகழடையச் செய்தன. 

MANGALAM,KUMBAKONAM TEMPLE | Incredible india, Visit india, Hindu temple

இதனிடையே டெல்லியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான லோக்தந்த்ரா அவுர் ஜந்தா தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேவிற்கொண்டு, 34  யானைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் யானை மங்களம் என தெரியவரவே, "சுறுசுறுப்பான யானை" என்ற விருதை வழங்கியுள்ளது.

யானையை சிறப்பாக பராமரித்தல், தூய்மையான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சுற்றுப்புறம் உள்ளிட்ட காரணிகளும் விருது தகுதிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன.

கும்பகோணம் போன மறக்காமல் மங்களத்திற்கு ஒரு 'ஹாய்' சொல்லிட்டு வாங்க. 

மங்களத்தை வீடியோவில் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe