கோபாலபுரம் மைதானம் 'கோவிந்தா' : எச்சரிக்கும் பா.ஜ., மத்திய அமைச்சரிடம் புகார்...!

published 1 year ago

கோபாலபுரம் மைதானம் 'கோவிந்தா' : எச்சரிக்கும் பா.ஜ., மத்திய அமைச்சரிடம் புகார்...!

சென்னை: கோபாலபுரம் மைதானத்தில் அகாடமி அமைப்பதாகக் கூறி அதனை பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் இடமாக மாற்ற முயற்சித்து வருவதாக பா.ஜ., நிர்வாகி வினோஜ் பி செல்வம் மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளார்.

திறமை மற்றும் நம்பிக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஏழை விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகளுக்கு அரசு மைதானங்களே ஆதரவளித்து வருகின்றன. அதிக அளவில் பணத்தை செலவழித்து தனியார் பயிற்சி மையத்திற்குச் செல்ல முடியாத விளையாட்டு வீரர்கள் மாவட்டந்தோறும் உள்ள விளையாட்டு மைதானங்களில் பல்வேறு விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இப்படி பயிற்சி எடுப்பவர்கள் உலக அளவில் சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களம் இறங்கும் ஏழை வீரர்களின் கனவில் மண்ணைப்போடும் செயல் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.

அதாவது பொதுவான ஒரு மைதானத்தில் பல்வேறு உட்கட்டமைப்புகளை செய்து உலகத் தரத்தில் அதனை மேம்படுத்துவோம் என்று கூறும் ஆட்சியாளர்கள் அதனை தனியார் கிளப்புகள் பொறுப்பில் விட்டுவிடுகிறார்கள். நாளடைவில் அந்த கிளப் நிர்வாகிகள், பொது மைதானத்தை சொந்தம் கொண்டாடத் தொடங்கி, ஏழை வீரர்களை உள்ளே அனுமதிக்கவே மறுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள மைதானத்தில் பாக்சிங் பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தின் நிர்வாகம் முழுவதும் கட்சி சார்ந்தவர்களிடம் வழங்கப்பட உள்ளதாக கிசுகிசுக்கிப்படும் நிலையில், பயிற்சி மையத்திற்கு சந்தா செலுத்தினால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர விளையாட்டு வீரர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜ., மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், அந்த மைதானத்திற்குச் சென்று பொதுமக்களிடம் விசாரித்துள்ளார். மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வினோஜ் பி செல்வம் X தளத்தில் கூறியிருப்பதாவது:

6வது முறையாகத் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கோபாலபுர குடும்பம் அப்பகுதியில் உள்ள மைதானத்தை மேம்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் தற்போது 2 கோடியில் உருவாகி வரும் Boxing அகாடமியை தனியாருக்கு  ஒதுக்க நினைக்கிறது இந்த குடும்பம்.

முரசொலிக்குச் சந்தா கட்டுபவர்களுக்கு மட்டுமே Boxing அகாடமி என்றாகிவிடக்கூடாது என அப்பகுதி இளைஞர்கள் என்னிடம் முறையிட்டார்கள். இந்த விவகாரத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர். அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று இதனைத் தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என அவர்களுக்கு வாக்குறுதி அளித்தேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

வினோஜ் பி செல்வம் X பதிவை பார்க்க…
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe