கோவையில் மகனை தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு…

published 1 year ago

கோவையில் மகனை தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு…

கோவை: கோவை கணபதி அருகே உள்ள நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அவரது மகனுடன் இன்று புகார் அளிக்க வந்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-
எனது மகன் சரவணம்பட்டி விசுவாசபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தார். அப்போது அந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்க்கும் இஸ்ரேல் சாமுவேல் என்பவர் எனது மகனை தாக்கினார். இது குறித்து நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அந்த புகாரின் அடிப்படையில், பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து எனது மகன் மீது வெறுப்புடன் காணப்பட்டார். 

மேலும் 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் வரை எந்த ஒரு விளையாட்டிலும் எனது மகனை சேர்க்கவில்லை. அதனால் நாங்கள் தற்போது எனது மகனை வேறொரு பள்ளியில் பிளஸ் ஒன் படிக்க சேர்த்தோம். இந்நிலையில் கடந்த 1ம் தேதி எனது மகன் முன்பு படித்த தனியார் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக எனது மகன் உட்பட அவரது நண்பர்கள் 5 பேர் பள்ளிக்கு சென்றனர். அப்போது பழைய நண்பர்களுடன் எனது மகன் சேர்ந்து ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த உடற்பயிற்சி ஆசிரியர் இஸ்ரேல் சாமுவேல் எனது மகனை தாக்கினார். 

பின்னர் அவரது அறைக்கு அழைத்து சென்று  எனது மகனை மிரட்டி மீண்டும் தாக்கினார். இதற்கு உடந்தையாக அதே பள்ளியில் கால்பந்து பயிற்சிகளாக இருக்கும் பாக்யராஜ் இருந்தார். இது குறித்து நாங்கள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றோம் ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து தாங்கள் தற்போது மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது குறித்த மனுவை அளித்து சென்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe