கோவையில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு 49.23 கோடி கடன் வழங்கப்பட்டது....

published 1 year ago

கோவையில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு 49.23 கோடி கடன் வழங்கப்பட்டது....

கோவை: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில்  அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்கள் அம்மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்களை வழங்கினர்.

அதன்படி கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கோவை மாவட்டத்தை சேர்ந்த 4 ஊராட்சி கூட்டமைப்புக்கு இரண்டு கோடி வங்கி பெருங்கடன் மற்றும் ஊரகப்பகுதியை சேர்ந்த 154 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 13.45 கோடி கடன்,  நகர்ப்புற பகுதியை சேர்ந்த 445 மகளிர் உதவி குழுக்களுக்கு 33.78 கோடி என மொத்தம் 603 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6835 மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 49.23 கோடி கடன் வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe