திருத்தணி சென்று சர்ச்சில் பிரார்த்தனை செய்த அண்ணாமலை!

published 1 year ago

திருத்தணி சென்று சர்ச்சில் பிரார்த்தனை செய்த அண்ணாமலை!

 

திருவள்ளூர்: 'என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஒரு பகுதியாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை திருத்தணியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி ‘என் மண் என் மக்கள்’ என்ற யாத்திரையை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கினார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

யாத்திரையின் ஒரு பகுதியாக அண்ணாமலை நேற்று திருத்தணி வந்தார். அவருக்கு மேளதாளங்கள் முழங்க, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து திருத்தணி காட் ரோட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். அங்கிருந்து அரக்கோணம் சாலை ம.பொ.சி சாலை வழியாக திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அவருக்கு பா.ஜ., வினர் முருகன் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்ட வெள்ளி வேல் காணிக்கையாக வழங்கினர்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஜாதி அரசியல், குடும்ப அரசியல், ஊழல், அடாவடி அரசியல் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றன. அந்த 4 அழுக்குகளை அகற்ற மக்கள் முன் வரவேண்டும். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜெகத்ரட்சகன் தி.மு.க.,வை பொறுத்தவரை நிறைகுடம் மக்களுக்கு அவர் குறைகுடம், திமுக வின் ரிசர்வ் வங்கியாக செயல்படும் ஜெகத்ரட்சகன் மக்களுக்கு தேவைகள் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து அவர் திருத்தணி சி.எஸ்.ஐ., தூய மாதா மத்தேயு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார். அவருக்கு சர்ச் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாதம் அண்ணாமலை தர்மபுரி சென்ற போது அங்குள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யச்சென்றார். அப்போது சிலர் அவரை தடுத்ததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், திருத்தணியில் அண்ணாமலைக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெற்றியில் திருநீறு பூசியவாறு சென்ற அண்ணாமலை, பா.ஜ., மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக பிரார்த்தனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை அண்ணாமலையிடம் தெரிவித்தனர். பலரும் முண்டியடித்துக் கொண்டு செல்பி எடுத்துக்கொண்டனர்.

பிற மத வழிபாட்டுத்தலங்களில் பா.ஜ.,வினர் நுழையக்கூடாது என்று எதிர்ப்பு எழுந்த நிலையில், "அனைத்து மதமும் சமம், யாரும் எந்த கோயிலிலும் வழிபாடு நடத்தலாம்" என்ற முனைப்புடன் அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் சென்று வரும் அண்ணாமலைக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe