கோவையில் காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க AI கேமராக்கள்- அமைச்சர் துவக்கி வைப்பு...

published 1 year ago

கோவையில் காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க AI கேமராக்கள்- அமைச்சர் துவக்கி வைப்பு...

கோவை: கோவை மதுக்கரை வனப்பகுதியில் 
ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுப்பதற்கா  ரூ. 7 கோடி  செலவில் அமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கேமரா செயல்பாட்டை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

கோவையில் மதுக்கரை முதல் வாளையார் வரை 21 கிலோமீட்டர் தூரம்  அடர்ந்த வனப்பகுதிகளின் வழியாக இரண்டு ரயில்பாதைகள் ஏ லைன் பி லைன் என பிரிக்கப்பட்டு  உள்ளன. இந்த ரயில்பாதைகளில் தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இரவு நேரங்களில் ரயில் மோதி காட்டு யானைகள்  உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகின்றது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கைக்கு பின்னர்
அவ்வழியே யானை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கபட்டது.  

அதனை தொடர்ந்து தற்போது  யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில்  செயற்கை நுண்ணறிவு(AI) மற்றும் தெர்மல்  கேமராக்கள் 7 கோடி மதிப்பில்  பொறுத்தப்பட்டுள்ளது.  ரயில்பாதைகளின் அருகில் 12 இடங்களில் உயர் கோபுரங்களில் அமைக்கப்பட்டு அதில் செயற்கை நுண்ணறிவு  மற்றும் தெர்மல் கேமராக்களை  பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்களின் பயன்பாட்டை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகூ  ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு மையமும் திறந்து வைக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe