மருதமலையில் சிறுத்தை நடமாட்டம்.. பக்தர்கள் பீதி.. வீடியோ காட்சிகள்!

published 1 year ago

மருதமலையில் சிறுத்தை நடமாட்டம்.. பக்தர்கள் பீதி.. வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய திருக்கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

மலைப்பகுதியில் கோவில் உள்ளதால் வன விலங்குகளான யானை சிறுத்தை , மான், கரடி போன்ற விலங்குகள் படிக்கட்டுகள் வழியாகவும் சாலை வழியாகவும் அடிக்கடி நடமாடுகின்றன. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவில் நிர்வாகம் சார்பாக சாலை வழிகள் படிக்கட்டுகள் வழிகள், கோவில் வளாகம் போன்ற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் வனத்துறை சார்பாக மலைக்கோவிலுக்கு செல்ல கூடிய பக்தர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இரு சக்கர வாகனங்களும் , 6:30 மணி வரை நான்கு சக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மலை மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவரின் காரின் முன்பு  முதல் வளைவில் சிறுத்தை ஓடியது. வாகனத்தின் வெளிச்சத்தை கண்ட சிறுத்தை சிறிது தூரம் ஓடி பின்பு வனப்பதுதிக்குள் சென்று மறைந்து விட்டது. அதனை அவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள்  சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?v=Q84rGogj2K4

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe