மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம், அனுவாவி கோவிலில் காட்டுயானைகள் நடமாட்டம்- பக்தர்களுக்கு நேர கட்டுபாடு விதித்த வனத்துறை...

published 1 year ago

மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம், அனுவாவி கோவிலில் காட்டுயானைகள் நடமாட்டம்- பக்தர்களுக்கு நேர கட்டுபாடு விதித்த வனத்துறை...

கோவை: கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளுவாம்பட்டி, மதுக்கரை ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. குறிப்பாக காட்டுயானைகள், சிறுத்தை, மான்கள், உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி தென்படுகிறது.

குறிப்பாக மக்கள் அதிகம் செல்லும் மருதமலை முருகன் கோவிலிலும், அனுவாவி முருகன் கோவிலிலும் காட்டுயானைகள் சிறுத்தை ஆகியவை அடிக்கடி தென்படுகின்றன. நேற்று முன் தினம் மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் சாலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளை குட்டியானை உட்பட 8 காட்டுயானைகள் கடந்து சென்றுள்ளது. இதனை அங்கிருந்த ஒருவர் அவரது செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், மருதமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால்  கோவிலுக்கு நடந்து செல்வதற்கும் இரு சக்கர வாகனங்களில் செல்வதற்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கார் மற்றும் பேருந்துக்கு காலை 6 மணி முதல் மாலை 7 வரையிலும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe