ஒன்றியத்தின் ஓரவஞ்சனை பற்றி தெரியுமா?- கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் ஒட்டிய போஸ்டர்...

published 1 year ago

ஒன்றியத்தின் ஓரவஞ்சனை பற்றி தெரியுமா?- கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் ஒட்டிய போஸ்டர்...

கோவை: கோவை சரவணம்பட்டி, சக்தி சாலை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவரும் 10வது வார்டு மாநகராட்சி கவுன்சிலருமான வே.கதிர்வேல் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்கின்ற வரிப்பகிர்வு குறித்தும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு அளிக்கப்படும் வரி பகிர்வு குறித்தும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்டரில் " ஒன்றியத்தின் ஓரவஞ்சனை பற்றி தெரியுமா?, தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து ஒன்றிய பாஜக அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு 26 பைசா எனவும் உத்தரபிரதேசத்திற்கு ஒரு ரூபாயில் இருந்து 2.73 ரூபாய் வரி பகிர்வு அளிக்கப்படுகிறது" என குறிப்பிடப்படுள்ளது.

அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு தரும் வரிகள் குறித்தும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தரும் வரி பகிர்வு குறித்தும் மேடைகளில் பேசி வருவது பேசு பொருளாகி உள்ள நிலையில் கோவையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கதிர்வேல் திமுக வில் சரவணம்பட்டி பகுதி கழக 10வது வார்டு செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe