பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான ஃபுட் டெக் ஹேக்கத்தான் போட்டி...

published 1 year ago

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான ஃபுட் டெக் ஹேக்கத்தான் போட்டி...

கோவை: கோவை தடாகம் சாலை ஜிசிடி கல்லூரியில் குக்கர் நிறுவனம் சார்பில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான 'ஃபுட் டெக் ஹேக்கத்தான் 2024' எனும் போட்டியினை நடத்தி அதில் சிறந்த பங்களிப்புக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள  ஏழு மாவட்டங்களில் குக்கர்(COOKR) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவையில் இயங்கும் இந்த குக்கர்  நிறுவனம் இரண்டு வருடங்களாக  செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் புதிய கிளையை துவக்க உள்ள நிலையில், குக்கர் நிறுவனம் ஒரு உணவு விநியோகதளத்தில் தங்களது தனி திறனை மேம்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உணவுகளை விநியோகம் செய்வதற்கு மாறாக வீட்டில் சமைக்க கூடிய உணவு வகைகளை வீட்டிற்கே விநியோகம் செய்து வரும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 
 

மேலும் உணவு விநியோகத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் வகையில் 'ஃபுட் டெக் ஹேக்கத்தான் 2024' என்னும் நிகழ்ச்சி கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஃபுட் டெக் ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது இதன் துவக்க விழாவில், குக்கர் நிறுவனத்தின் 
இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பிரபா சந்தானகிருஷ்ணன், இணை நிறுவனர்கள் நிர்மல்குமார், சரவணகுமார் கந்தசாமி ஆகியோர் துவக்கி வைத்தார்.
இந்த 'ஃபுட் டெக் ஹேக்கத்தான்'  போட்டியில் அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர், இதில் 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வெற்றி பெற்ற முதல் 5 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஹேக்கத்தான் இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு குக்கர் நிறுவனம் சார்பில் ரூபாய் 50,000 மதிப்புள்ள பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
 

மேலும் இதுகுறித்து குக்கர் நிறுவனத்தின் மென்பொருள் மேம்பாடு துணைத் தலைவர் ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குக்கர் நிறுவனம் உணவு விநியோக தளத்தில் புதுவிதமாக வீட்டில் சமைக்க கூடிய உணவுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. மேலும் இவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்பில் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியின் மூலம் மாணவர்கள் நடைமுறையில் தொழில்நுட்பத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அமையும். மேலும் திறமையான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை எங்கள் நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் மாணவர்கள் திறமையுடன் செயல்படுகின்றனர். மேலும் இது போன்ற நிகழ்வு கோவையில் உள்ள சி.ஐ.டி, பி.எஸ்.ஜி போன்ற பொறியியல் கல்லூரியில் நடத்துவதே எங்கள் நோக்கம் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe