பொள்ளாச்சியில் யானையை ஆபத்தான முறையில் விரட்டிய அதிமுக தொண்டர்- ஒரு லட்சம் அபராதம் விதித்த வனத்துறை- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 1 year ago

பொள்ளாச்சியில் யானையை ஆபத்தான முறையில் விரட்டிய அதிமுக தொண்டர்- ஒரு லட்சம் அபராதம் விதித்த வனத்துறை- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மிக முக்கியமான பகுதியான நவமலை உள்ளிட்ட இடங்களில் காலையில் நடமாட ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு பொதுமக்கள் பயணிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்றன. 

நவமலை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் உள்ளிட்டவை அதிகமாக நடமாடுவதால், மனித விலங்கு முரண்களை தடுக்கும் விதமாக, வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் நவமலை பகுதியில் தோட்டத்திற்கு சென்ற கோட்டூர சார்ந்த அதிமுக தொண்டரான மிதுன் உயர் ஒலியுடன் (ஹைபீம்லைட்) காரை இயக்கி ஒரு யானையை அபாயகரமாக விரட்டி இருக்கின்றார். இதனால் அந்த யானை, மிரண்டு வனப்பகுதிகளுக்குள் நுழைந்து ஓடியுள்ளது. 

இதனை அந்த நபர் வீடியோ பதிவு செய்துப்தனது சமூக வலைதள பக்கத்திலே பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோவை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்தக் கார் வெள்ளை நிற ஸ்கார்பியோ என்பது தெரிய வந்தன. இந்த வாகனத்தை ஓட்டி வந்தது கோட்டூரை சார்ந்த மிதுன் என்பதனை அறிந்து வனஉயிர் பாதுகாப்பு சட்ட பிரிவில் நடவடிக்கை எடுத்த வனத்துறை, மிதுனுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

வீடியோ காட்சிகளை பார்க்கும் பொழுது வன உயிர் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது தெரிய வருகின்றன. தடை செய்யப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுடன் உள்ள வன பகுதிகளுக்குள் பயணிப்பதே குற்றம் என்ற நிலையில், பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலிலுள்ள வன விலங்குகளை துன்புறுத்துவது, யானை போன்ற விலங்கு இனங்களிடம் ஆபத்தான முறையில் நடந்து கொள்வது சட்டப்படி பெரும் குற்றம். வன உயிர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய மிதுனை அதிகாரிகள் எச்சரித்து அபராதம் வித்தித்தனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/RK83h7TesaI?si=HSojRxF6lS4-rJYI

 

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe