ஆன்லைன் மூலம் பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்கலாம் என கூறி கோவை இளைஞரிடம் 16¼ லட்சம் மோசடி...

published 1 year ago

ஆன்லைன் மூலம் பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்கலாம் என கூறி கோவை இளைஞரிடம் 16¼ லட்சம் மோசடி...

கோவை: கோவை வடமதுரை குமரன் அவன்யூவை சேர்ந்தவர் மதுசூதனன் வயது 23. சம்பவத்தன்று இவர் மற்றும் இவரது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் பகுதி நேர வேலையாக பெரிய பெரிய நிறுவனங்களில் பங்குகளை வாங்கி விற்பதன் மூலமாக சம்பாதிக்கலாம் எனக் கூறியிருந்தது இதை நம்பிய அவர்கள் இருவரும் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு தவணை முறையில் 16,25,000 ரூபாய் வெவ்வேறு வங்கி கணக்கு மூலம் செலுத்தியுள்ளனர். 

பின் அவர்கள் செலுத்திய பணத்தினை திரும்ப பெறுவதற்காக அவர்களை தொடர்பு கொண்டு கேட்டனர் அதற்கு அவர்கள் மீண்டும் ஒருமுறை பணம் செலுத்த வேண்டும்  செலுத்தினால் தான் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும் என கூறியுள்ளனர். இதை எடுத்து தாங்கள் மோசடி கும்பலிடம் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe