கோவை போலீசாருக்கு யோகா பயிற்சி...

published 1 year ago

கோவை போலீசாருக்கு யோகா பயிற்சி...

கோவை: கோவை மாநகர ஆயுதப்படைப் பிரிவில் பணிபுரியும் போலீசாருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாரின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கிய அறிவுரையின் பேரில் இன்று போலீசாருக்கு யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதில் ஆயுதப்படை போலீசார் 450க்கும் மேற்பட்டோர் ஒரே நிற உடை அணிந்து யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

யோகா பயிற்சி வகுப்பிற்குப் பின் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில்,

தற்பொழுதுள்ள நவீன வாழ்வியல் முறைக்கு யோகா எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும், யோகா செய்வதினால் மனிதனின் மனதிற்கும், உடலுக்கும் ஏற்பட கூடிய நன்மைகள் குறித்தும், காவல் துறையினருக்கு யோகா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்தும் பேசி, அனைத்து காவல்துறையினரையும் யோகா பயிற்சி செய்ய ஊக்கமளித்தார். 

மேலும் 48 நாட்கள் எந்தவொரு பயிற்சியையும் தொடர்ந்து செய்வதன் மூலம் அது ஒரு பழக்கமாக மாறும் என்பதால் யோகாவை தொடர்ந்து செய்து வர அனைத்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேற்படி காவலர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு காவல் உதவி ஆணையர் சேகர், மோட்டார் வாகனப்பிரிவு காவல் கோவிந்தராஜு, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பிரதாப்சிங் OZONE யோகா ட்ரஸ்ட் நிறுவனர் பாலகிருஷ்ணன், JSS இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் வெங்கடேஷ், செல்வ லட்சுமி மற்றும் குழுவினர்களும் கலந்துகொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe