தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை!

published 1 year ago

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை!

பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் தமிழ்நாடு முழுவதிலும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரை உட்பட பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவற்றின் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அப்போது அவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் ராடமைன் பி என்ற வேதிப்பொருள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

தடையை மீறி பஞ்சுமிட்டாய் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பஞ்சுமிட்டாய் விற்பனைக்குத் தடை விதித்திருப்பதாக மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆய்வு செய்து பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe