கோவை மாநகராட்சியில் 20.24 கோடி மதிப்பில், 8789 புதிய எல்.இ.டி தெருவிளக்குகள்...

published 1 year ago

கோவை மாநகராட்சியில் 20.24 கோடி மதிப்பில், 8789 புதிய எல்.இ.டி தெருவிளக்குகள்...

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.20.24 கோடி மதிப்பீட்டில் 8789 எண்ணிக்கையிலான புதிய எல்.இ.டி தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக  மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.46 சாஸ்திரி ரோடு பகுதியில் எல்.இ.டி தெருவிளக்குகள் பொருத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இது அவர் கூறுகையில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநில நகர்ப்புர உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி திட்டத்தின்கீழ் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.934.20 இலட்சம் மதிப்பீட்டில் 6250 எண்ணிக்கையிலான புதிய எல்.இ.டி. தெருவிளக்குகள் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்கம்பங்களில் பொருத்தும் பணிகளும் மற்றும் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.999.78 இலட்சம் மதிப்பீட்டில் 1451 எண்ணிக்கையிலான எல்.இ.டி தெருவிளக்குகள் மின்கம்பத்துடன் மையத்தடுப்பிலும் மற்றும் சாலையின் ஓரத்திலும் அமைக்கும் பணிகளும் மேலும், இடைநிரப்புதல் திட்டத்தின்கீழ் மாநகராட்சி பொது நிதியிலிருந்து மத்திய மண்டலத்திற்குட்பட்ட 20 வார்டு பகுதிகளில் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் 1088 எண்ணிக்கையிலான எல்.இ.டி தெருவிளக்குகள் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்கம்பங்களில் பொருத்தும் பணிகளும் என மொத்தம் ரூ.20.24 கோடி மதிப்பீட்டில் 8789 எண்ணிக்கையிலான எல்.இ.டி தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

அவற்றில் சுமார் 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அனைத்து பணிகளும் விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe