கோவைக்கு 'டாட்டா' காட்டும் 6 ரயில்கள்; பயணிகள் கொந்தளிப்பு!

published 1 year ago

கோவைக்கு 'டாட்டா' காட்டும் 6 ரயில்கள்; பயணிகள் கொந்தளிப்பு!

கோவை: கோவை வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் செல்வதற்கான பரிந்துரையால் பயணிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தென்னக ரயில்வேக்கு அதிக வருவாய் தரும் ரயில் நிலையமாக கோவை மத்திய ரயில் நிலையம் உள்ளது.

ஏற்கனவே வடகோவையில் இருந்து இருகூர் வரை இருவழிப்பாதை பணிகள் நடைபெறுவதால் கோவை மத்திய ரயில் நிலையம் வழியாக சென்ற 13 ரயில்கள் போத்தனூர் வழியாக திருப்பி விடப்பட்டன. கடந்த 2012ல் இந்த பணிகள் முடிவடைந்தும் தொடர்ந்து அதே வழியிலேயே ரயில்கள் இயக்கப்பட்டன. 

இந்த ரயில்களில் சில இன்றளவிலும் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதில்லை. இந்த சூழலில், கோவை வழியாக செல்லும் 6 ரயில்கள் கோவை வராமல் போத்தனூர் வழியாக செல்ல சேலம் கோட்ட எம்.பி.,க்கள் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 6 விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராமல் இருகூர், போத்தனூர் வழியாக இயக்க இந்திய ரயில்வே துறை திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.

ஆலப்புழா, சென்னை விரைவு ரயில்,திருவனந்தபுரம் புதுடில்லி விரைவு ரயில்,கன்னியாகுமரி டிப்ரோக்கர் விவேக் எக்ஸ்பிரஸ்,எர்ணாகுளம், பாட்னா விரைவு ரயில் .கொச்சி வேலி எஸ்வந்த்பூர் விரைவு ரயில். எர்ணாகுளம், பாட்னா அதிவிரைவு ரயில் உட்பட 6 ரயில்களை கோவை ரயில் நிலையம் வராமல் இயக்க ரயில்வேத்துறை திட்டமிட்டு வருகிறது.

இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திலிருந்து பயணிக்கும் நிலையில், திடீரென 6 ரயில்கள் கோவை ரயில் நிலையத்தை புறக்கணித்துச் செல்லும் முடிவுக்கு கோவை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe