மாணவிகளே... கிருஷ்ணம்மாள் கல்லூரியில் உணவு, தங்குமிடத்துடன் இலவச 'சீட்' பெற வேண்டுமா?

published 11 months ago

மாணவிகளே... கிருஷ்ணம்மாள் கல்லூரியில் உணவு, தங்குமிடத்துடன் இலவச 'சீட்' பெற வேண்டுமா?

கோவை: பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச சீட் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு துறைகளின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். 

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இக்கல்லூரி நிர்வாகம் சார்பில் இலவச சீட் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தடகளம், வில் அம்பு, கூடைப்பந்து, பேட்மிடன், செஸ், சைக்கிளிங், கோல்ஃப், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், சிலம்பம், நீச்சல், டேக்வாண்டோ, டேபிள் டென்னீஸ், டென்னீஸ், குத்துச்சண்டை மற்றும் வூஷூ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலையில் இந்தாண்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் இலவச சீட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம், ஸ்காலர்ஷிப், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பான விவரங்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ் மூலம் பின்வரும் எண்களை தொடர்பு  கொள்ளலாம்:

Dr.M.Jayachitra - 9566442202

Mrs.Suriyaprabha- 8778493054

Mrs.Sugantha - 9487600191

இது போன்ற அனைத்து கோவை செய்திகளுக்கும் எங்கள் வாட்ஸ்-அப் சேனலை பின்தொடரலாம்: https://whatsapp.com/channel/0029VaBGFq7JZg4EvHELBx3R

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe