மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகியுள்ளது- கோவையில் எல்.முருகன் பேச்சு...

published 11 months ago

மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகியுள்ளது- கோவையில் எல்.முருகன் பேச்சு...

கோவை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று  மாலை நடைபெற்றது.

பழையூர் பகுதியில் துவங்கிய யாத்திரை சித்தாபுதூர் அருகில் நிறைவு பெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன், மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், ராஜீவ் சந்திரசேகர், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

யாத்திரையின் நிறைவாக சித்தாபுதூர் அருகே  பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், 'என் மண், என் மக்கள் யாத்திரையின் மூலம் பாஜக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதோடு, தமிழகத்தை ஆளும் திமுக அரசின் குறைகளையும் ஊழல்களையும் மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. 

வேல் யாத்திரையின் மூலம் எப்படி நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்களோ, அதே போல் இந்த யாத்திரையின் மூலம் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைவர் மத்தியிலும் இந்த யாத்திரைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக நமது நாட்டை மிகவும் வேகமாக வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வருகிறார்.

2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும் என்கிற இலக்கை நோக்கி நமது நாடு பயணித்து வருகிறது. இலவச வீடு திட்டம், இலவச கேஸ் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்திற்கு 5 வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்புத்தூரில் இருந்து 2 வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது.

இந்தியாவில் உத்திரபிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே பாதுகாப்பு தளவாடங்களுக்கான உற்பத்தி மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த பாரதத்தின் வளர்ச்சி என பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக, ஹாட்ரிக் சாதனையாக, 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகி உள்ளது.

தமிழகத்திலிருந்து 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பணிகளை நாம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe