கோவையில் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த வட மாநில இளைஞர் கீழே விழுந்து பலி...

published 11 months ago

கோவையில் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த வட மாநில இளைஞர் கீழே விழுந்து பலி...

கோவை: பீகார் மாநிலம் ஹசன்பூரை சேர்ந்தவர் ஷிவ்நாத் பஸ்வான்(22). இவர் கோவை ரத்தினபுரியில் தங்கி தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில், கடந்த 19ம் தேதி ரத்தினபுரி 7வது வீதீயில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் மொட்டை மாடியில் அவர் குடிபோதையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe