கோனியம்மன் கோவில் கூட்ட நெரிசலில் பெண்களிடம் கைவரிசை... பலே திருடிகள் கைது!

published 11 months ago

கோனியம்மன் கோவில் கூட்ட நெரிசலில் பெண்களிடம் கைவரிசை... பலே திருடிகள் கைது!

கோவை: கோனியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கைவரிசை காட்டிய பெண்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தெற்கு பகுதி துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ருவந்திகா சப்- இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, மஞ்சுளா, தலைமை காவலர்கள் கார்த்தி, பூபதி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் உக்கடம், பெரிய கடை வீதி, குனியமுத்தூர் கோனியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற 3 பெண்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தி தோப்பு பார்வதி (35) பேரூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி  இருந்து கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை குறிவைத்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட இருந்தது தெரியவந்தது.

இதேபோல் கிணத்துக்கடவை சேர்ந்த முத்துமாரி (28), அதே பகுதியை சேர்ந்த ஆர்த்தி (26) சொந்த ஊர் மதுரை.
கடந்த ஒரு வாரத்தில் பல பெண்களிடம் நகை பறித்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 20 பவுன் நகை பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe