கோவையில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய திட்டம்; இந்தியாவிற்கே இது புதுசு!

published 11 months ago

கோவையில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய திட்டம்; இந்தியாவிற்கே இது புதுசு!

கோவை: இந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிகள் முதியோர்களுக்காக சுகம்யா திட்டம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் உள்ள  காவல் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் புகார் அளிக்க ஏதுவாக தனியார் பங்களிப்போடு ''சுகம்யா'' என்ற திட்டம் கோவை மாநகர காவல் ஆணையாளரால் துவக்கி வைக்கப்பட்டது.

கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க வரும்  மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக "சுகம்யா" என்ற திட்டத்தை சுவர்கா அறக்கட்டாளை பங்களிப்புடன் இணைந்து மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உக்கடம் காவல் நிலையத்தில் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தில் காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் உள்ளே செல்ல ஏதுவாக சக்கர நாற்காலி மற்றும் அதற்கான பாதை, செவி பார்வை  குறைபாடு உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிய தனியார் பணியாளர் நியமனம், நேரடியாக சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகள் காவல் ஆய்வாளரை சந்திக்க ஏதுவாக ஒலி எழுப்பான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 50 விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் உள்ளதால் அவர்களுக்கான உரிமைக்காகவும் வசதிக்காகவும் இந்த சிறப்பு ஏற்பாடுகள் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தி உள்ளதாக அறக்கட்டளை இயக்குநர் சுவர்னலதா தெரிவித்தார்.    

இந்நிகழ்வில் பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க வரும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் காவல் நிலையங்களில் சக்கர நாற்காலி செல்லும் பாதை மற்றும் லிப்ட் வசதிகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பார்வை, செவி குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தனியார் பங்களிப்புடன் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல கோவை மாநகரில் இடைவெளி கண்டறிதல் என்ற அடிப்படையில் ஜி.பி.எஸ் மூலம் இடங்களை குறியிட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. 50 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. விரைவில் மற்ற பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும். கடந்த ஆண்டில் மட்டுமே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைகளை பார்த்தவாறு பொறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe