செம்மரம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கோவையில் கைது...

published 11 months ago

செம்மரம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கோவையில் கைது...

கோவை: கோவையில் ரூபாய் 5 கோடி மதிப்பான செம்மரம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூரில் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திருப்பூர் அவிநாசி சாலையில் சோதனை செய்த போது அந்த வழியாக செம்மரங்களை ஆறு பேர் கண்டெய்னர் லாரியில் கடத்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. 

கண்டெய்னரில் முன் பகுதியில் காய்கறி மூட்டைகளை ஏற்றி அதற்கு அடியில் செம்மர கட்டைகளை பதுக்கி இருந்தனர். அதிகாரிகள் விசாரித்த போது திருப்பூர் குங்குமபாளையம் குடோனில் பதுக்கி வைத்து செம்மரங்களை கேரளா கடத்திச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. குடோனில் சோதனை இட்டபோது அங்கே 9.4 டன் எடையில் செம்மர கட்டைகள் இருந்தன. லாரியில் இரண்டு டன் செம்மர கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 5 கோடி ஆகும். 

இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த உஸ்மான் பாரூக், சையது அப்துல்லா காசிம், கோவையைச் சேர்ந்த முபாரக், கண்ணன், அப்துல் ரகுமான் தமிம் அன்சாரி ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று ஆறு பேரும் தலைமுறையாகி விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக வருவாய் புலனாய்வு பிரிவினர் போலீசில் புகார் அளித்து 6 பேரை தேடி வந்தனர். 

இந்நிலையில் முபாரக் கோவை பெரிய கடை வீதியில் காவல் நிலையத்துக்கு வழக்கு விஷயமாக சென்ற போது இவர் ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe