கொடநாடு விவகாரம் : தனியார் ரிசார்ட் உரிமையாளரிடம் கோவையில் வைத்து தனிப்படை விசாரணை

published 2 years ago

கொடநாடு விவகாரம் : தனியார் ரிசார்ட் உரிமையாளரிடம் கோவையில் வைத்து தனிப்படை விசாரணை

கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த தனியார் ரிசார்ட் உரிமையாளரிடம் தனிப்படை போலீசார் கோவையில் வைத்து விசாரணை நடத்தினர். 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் ஏராளமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல  ஐ.ஜி  சுதாகர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது 

இந்த விசாரணை சென்னை கோவை உதகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது  இந்த விசாரணை பொறுத்தவரை இதுவரை 220 பேர் இடம்  நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை சிஐடி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

அதன் அடிப்படையில்  மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி  அவரது மகன் செந்தில்குமார்  மற்றும் அவரது உதவியாளர் பழனிச்சாமி ஆகியோரிடம் 

கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து  விசாரணை  நடைபெற்றது. இதனிடையே பாண்டிச்சேரியில் உள்ள தனியார் ரிசார் உரிமையாளர் நவீன் பாலாஜி  தனிப்படை போலீசார் விசாரணை துவக்கி உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe