பாபா ரஜினி போல் ஒரே நாளில் கோவை விடுதியை மாற்றிய உதயநிதி!

published 11 months ago

பாபா ரஜினி போல் ஒரே நாளில் கோவை விடுதியை மாற்றிய உதயநிதி!

கோவை: கோவையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். விமான நிலையம் வந்தடைந்த அவர் பாலசுந்தரம் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் அரசினர் கல்லூரி மாணவர் விடுதிக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

அந்த ஆய்வின்போது விடுதி வளாகத்தில் இருக்கக்கூடிய அறைகள், மாணவர்கள் உபயோகிக்க கூடிய கழிவறைகள்,  மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவு ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன்   தேவைப்படும் வசதிகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். 

அப்போது மாணவர்கள் விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் கேட்கக்கூடிய வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கும்படியும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி சென்றார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் இரவோடு இரவாக விடுதியில் தேவைப்படும் வசதிகளையும் தூய்மை பணிகளையும் செய்து முடித்து கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தியுள்ளனர்.

இதனை கோவை மாநகராட்சி நிர்வாகம் X வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் இரவோடு இரவாக விடுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்வதும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் இடம் பெற்றுள்ளன. மேலும் இப்பணிகளை விரைந்து முடித்த அதிகாரிகளுக்கும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் விடுதி மாணவர்கள் நன்றிகளை தெரிவிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

 

நடிகர் ரஜினி நடித்த பாபா திரைப்படத்தில் இரவோடு இரவாக சாலை போடுவது தெருவிளக்குகள் போடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இங்கு ஆய்வு மேற்கொண்டு சென்றவுடன் இரவோடு இரவாக பணிகள் செய்து முடிக்கப்பட்டிருப்பது பாபா படத்தை நினைவுப்படுத்துகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe