ஒப்பணக்கார வீதியில் பெலிக்கன் சிக்னல்... கமிஷனர் தகவல்!

published 11 months ago

ஒப்பணக்கார வீதியில் பெலிக்கன் சிக்னல்... கமிஷனர் தகவல்!

கோவை: கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவலர்கள் வெயில் காலத்தில் சிரமமின்றி பணி புரிவதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய, டிராபிக் பூத் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேற்று இறைவா திறந்து வைத்தார். இந்த பூத்தில் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையாளர், கோவை மாநகரில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பெலிக்கன் சிக்னல்களை பொருத்தி வருவதாக தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பூத் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்ற சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் கூடிய விரைவில் ஒப்பணக்கார விதி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பெலிகன் சிக்னல்களை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இது போன்ற குளிர்சாதன வசதி உடைய பூத்துகள் தொடர்ச்சியாக திறந்து வைக்கப்பட இருப்பதாகவும் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe