கோவையில் பேரூராதினம் அவதரித்த இடத்தில் மருத்துவமனை துவக்கம்...

published 11 months ago

கோவையில் பேரூராதினம் அவதரித்த இடத்தில் மருத்துவமனை துவக்கம்...

கோவை: 24 ஆம் குருமகா சன்னிதானம் மறைந்த பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவதரித்த கோவை முதலிபாளையத்தில் அவரது  நினைவாக ஏழை எளியோருக்கு  மருத்துவசேவை வழங்க பேரூரடிகளார் மருத்துவமனை துவங்கப்பட்டது...


கோவையில் பழமை வாய்ந்த ஊராகவும்,பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்ட பேரூர் பகுதியில், பேரூராதீனமாக, தமிழில் திருக்கோயில் திருக்குடநீராட்டு விழா, தமிழ் வேள்விகள் , தமிழ் அர்ச்சனை முறைமை  போன்ற வாழ்வியல் அருளியல் நிகழ்வுகளை தமிழில் ஆக்கிக் தந்து செயல் படுத்திய பெருமை பேரூர், ஆதினத்திற்கு உண்டு. 

இந்நிலையில், மறைந்த பேரூர் ஆதீனம்  சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவதரித்த  கணேசபுரம், முதலிபாளையம் பகுதியில், கிராம மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் விதமாக புதிய பேரூரடிகளார் மருத்துவமனை துவங்கப்பட்டது. இதற்கான துவக்க விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,மற்றும் பல்ச நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காட்டம்பட்டி முதன்மைச் சாலையில் துவங்கப்பட்டுள்ள  இம்மருத்துவமனையில் முதல் கட்டமாக  புறநோயாளிகள் பிரிவு,துவங்கப்பட்டுள்ளதாகவும், கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக,தற்போது பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு மூட்டுச் சிகிச்சை  ஆகிய சிறப்புப் பிரிவுகள் முழுமையாக 24 மணி நேரமும் இயங்கும்என சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

குறிப்பாக பெண்கள் மகப்பேறு மருத்துவத்தில் கிராம பெண்கள் பயனடையும் வகையில் துவங்கி உள்ளதாகவும், தேவைப்பட்டால் அறக்கட்டளை வாயிலாக இலவச சிகிச்சை உதவிகளும் வழங்க உள்ளதாக  கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe