கோவையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த திமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் மக்கள்...

published 11 months ago

கோவையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த திமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் மக்கள்...

கோவை: அரசு பேருந்துகளை முறையாக இயக்காத போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்த திமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்களா  பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மதுக்கரை அருகே திருமலையாம்பாளையம்,பாலத்துறை,  நாச்சிபாளையம், மதுக்கரை மார்க்கெட், கும்மிட்டிபதி இதனை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. இங்கு காந்திபுரத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயங்கி வந்தன.

இந்நிலையில் கலந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில்  பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தும், முறையாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், சரிவர பேருந்துகளை இயக்காமலும் போக்குவரத்து நிர்வாகம்  இருந்து வந்து உள்ளனர்.

இதனால் அப்பகுதி பள்ளி மாணவ - மாணவிகள், அலுவலகங்கள் செல்லும் பணியாளர்கள் மற்றும் கூலி பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும்  பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து அப்பகுதி தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை போக்குவரத்து கழகத்திற்கு மனு அளித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கில் இருந்து வந்துள்ளதாக கூறி அரசு பேருந்துகளை சிறை பிடித்து திமுக கவுன்சிலர் உட்பட பகுதி பொதுமக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை முறையக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பிறகு போராட்டம் கைவிடப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe