575 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

published 2 years ago

575 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

வெள்ளைபாளையம் ஊராட்சியில் 575 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் வெள்ளை பாளையம் ஊராட்சியில் இன்று  மாவட்ட ஆட்சித்தலைவரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜிஎஸ் சமீரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் அவர் பேசுகையில் மக்களை தேடி அரசின் திட்டங்கள் செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் மக்களை தேடி மருத்துவம்,இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களை சான்றாக விளங்குவதாகவும் அதன்படியே இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது என்றார்.

மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு முன்பாக  இப்பகுதிகளில் ஒரு மாதத்திற்கு  முன்னரே பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று  மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு அதற்கான நலத்திட்டங்களும் இந்த முகாம்களில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்களிடம் பெறபட்ட மனுக்களில்  575 பயனாளிகளுக்கு 2 கோடியே 23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இதனை ஒருங்கிணைத்து அனைத்து துறை அதிகாரிகளுக்கு பாராடுக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், காரமடை நகராட்சித் தலைவர் உஷா ரமேஷ்,காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமணிமேகலை,ஓன்றிய குழு உறுப்பினர் ஜெகதீசன்,  பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேந்திரன்,வட்டாட்சியர் ரமேஷ், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe