மாற்றுத்திறனாளி குழந்தைகளை சுற்றுலா அழைத்து சென்ற கோவை மாவட்ட நிர்வாகம்...

published 11 months ago

மாற்றுத்திறனாளி குழந்தைகளை சுற்றுலா அழைத்து சென்ற கோவை மாவட்ட நிர்வாகம்...

கோவை: கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து கோவை ஆரம்ப பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஒரு நாள் சுற்றுலாவாக ஆனைக்கட்டி அழைத்துச் சென்றனர்.

இதற்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுற்றுலா செல்வோர்க்கு தேவையான சிற்றுண்டிகளை வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe