கோவை புதிய தொழில் பூங்காவில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு..! அமைச்சர் உறுதி

published 11 months ago

கோவை புதிய தொழில் பூங்காவில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு..! அமைச்சர் உறுதி

கோவை: கோவை சூலூர் அடுத்த கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா தொழில் பூங்காவை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கிட்டாம்பாளையம் கிராமத்தில் 316 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் கடந்த கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின்னர் இங்கிருந்த சிறு குறு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் இத்திட்டத்தை மீண்டும் கொண்டுவர அரசு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 24 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்த தொழில்பேட்டையில் உள்ள 585 மனைகளுக்கும் கனரக வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் 26 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் 1.9 கிலோமீட்டர் நீளத்திற்கு  சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு எல்லா பணிகளும் முடிந்த பிறகு இன்னும் ஒரு ஆண்டில்  முதல்வர் ஸ்டாலினை அழைத்து தொழிற்பேட்டையை திறக்க திட்டமிட்டுள்ளோம். 

Iதிட்டம் செயல் வடிவத்திற்கு வந்த பிறகு 10,000 பேருக்கு நேரடியாகவும் 20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும், சிறு குறு தொழில் முனைவோருக்கு தொழில் கடன் வழங்குவதற்கு அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe